இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]

மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி, மனதை ரணமாக்கும் விதமாக பிறந்த ஒருவாரமே ஆன குழந்தை பட்டினியால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள், ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை அடுத்த நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை. காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை காட்சிகளை பார்க்கும்போது மனதை ரணமாக்குகிறது. […]

என்ன உடை அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்தால் அதற்கு தண்டனையாக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.. அல்லது சிறைத்தண்டனை கூட கிடைக்கும்.. வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான […]

நைஜர் நாட்டின் தென்மேற்கு டோசோ பகுதியில் ராணுவ வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, நைஜர் நாட்டில் இந்திய தூதரகம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, டோசோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பயங்கரவாதிகள், கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் இரண்டு இந்தியர்கள் […]

வியட்நாமில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்றது தென் சீன கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்நாம். இதிலும் குறிப்பாக, ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் […]

ஈரானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரான ஷிராஸ் நகர் பகுதியில் நேற்று காலை பேருந்து ஒன்று 55 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு […]

கிழக்கு ஹாலிவுட்டில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் புகுந்ததால் 28 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே கிழக்கு ஹாலிவுட் பகுதியில் இருந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே திடீரென ஒரு வாகனம் புகுந்ததால் 28 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. 8–10 பேர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் 10–15 பேர் நல்ல […]

உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]