fbpx

பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

கடந்த ஆகஸ்ட் 20 அன்று பேரணியில் உரையாற்றிய முன்னாள் இம்ரான் கான், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் கூறினார், இதனால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், …

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை ‘கோஸ்தா-2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. அந்த …

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை ’இயன்’ புயல் கடுமையாக தாக்கியிருக்கிறது. கடந்த வெள்ளியன்று புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவே இருந்திருக்கிறது.

ஃப்ளோரிடாவில் ஏற்பட்ட இந்த ’இயன்’ புயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனெனில், இயன் புயல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்ததால், ஃப்ளோரிடாவில் உள்ள வீடுகள், …

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு …

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடந்த “இந்தோனேசியாவின் டாப் லீக் BRI லிகா கால்பந்து போட்டியில் கலவரம் வெடித்ததில் குறைந்தது 127 பேர் உயிரிழந்தனர். வன்முறை நெரிசலாக மாறியது, ஆயிரம் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகளும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா …

பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் அப்படியே ஸ்ப்ரே பண்ணா போதும் .. இது பற்றிய தகவலை பார்க்கலாம்..

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று வித்தியாசமான ஆடைகளை மாடல் அழகிகளுக்கு அணிவித்து அணிவகுத்தனர். அப்போது …

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது;- ரஷிய அதிபர் புதினின் பொறுப்பற்ற பேச்சு மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதை சார்ந்த நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறியாகும்.

அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அந்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு தொடர்ந்து …

இங்கிலாந்து ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னரான சார்லஸ் உருவம்பொறிக்கப்பட்ட நாணயம் அந்நாட்டில் வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96 வயதில் செப்டம்பர் 8ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேசிய கீதத்திலும் புதிய மன்னருக்கு ஏற்றவாறு வார்த்தைகள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களில் …

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஷியைட் பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்து உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. …

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் ‘நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2’ எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, புடினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.. எனினும் எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா உக்ரைன் …