fbpx

உக்ரைன் போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்..

கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி தொடங்கியது.. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய …

ஈரானில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் அணிவது கட்டாயப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கியதால், படுகாயமடைந்தார். இந்நிலையில் மாஷா மருத்துவமனையில் …

கனடாவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது. கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், கனடா செல்லும் இந்தியர்களுக்கு பயண ஆலோசனையை அரசு இன்று வெளியிட்டது. கனடாவில் நடக்கும் வெறுப்புக் குற்றச் செயல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் பேசியதாக கூறப்பட்டுள்ளது.…

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது..

உக்ரைனில் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் அணு ஆயுத தாக்குதல் குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனிடையே, அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. …

லண்டனில் ராணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது சவப்பெட்டியை நோக்கி ஓடிய இளைஞர் ’’ அவர் உயிருடன் இருக்கின்றாரா’’ என சோதனை செய்தேன் என கோர்ட்டில் பதில் அளித்திருக்கின்றார்.

லண்டனில் ராணியின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அஞ்சலி செலுத்தினர். இரவும் பகலும் வெயில் மழை என பாராமல் வந்து சவப்பெட்டி …

சீனாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியான ஃபுஸெங்குவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீனா டெய்லி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜிலின் மாகாணத்துக்கு உள்பட்ட ஜாங்சூன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, முன்னாள் சட்ட அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஃபு பெய்ஜிங் மாநகராட்சியின் பொது …

சீனாவில் நிதி பிரிவு தொடர்புடைய ஊழல்களை ஒழிக்கும் தீர்மானத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையில், பல உயர்மட்ட அதிகாரிகள் சிக்குகின்றனர். இதன்படி, நிதி சார்ந்த அரசு துறையின் பல மூத்த அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் கண்டறியப்பட்டு, கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர் உள்ளனர்.

சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் …

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜூ பென் வி. இவர் அந்த பகுதியில் பிரபல டாக்டராக உள்ளார். இந்த நிலையில் இவர் மீது கடந்த 2020-ஆம் வருடம் ஒரு பெண் தனது அந்தரங்க வீடியோக்களை அவர் வைத்திருப்பதாக புகார் கொடுத்தார். எனவே அதிகாரிகள் அவரை விசாரித்தனர். அப்போது அவரது ஷூவில் இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, ஹாஸ்பிடல், மால்கள், …

ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் மிகப்பெரிய கள்ளநோட்டு விநியோகஸ்தரான லால்முகமது நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் ஐ.எஸ்.ஐ. இயக்கத்திற்கு பக்கபலமாக செயல்பட்டு வந்த கள்ள நோட்டுக்களை விநியோகம் செய்து வந்த லால்முகமது (55) நேபாளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்ஐ இயக்கத்தில் பெரிய கைகூலியான லால் , இந்தியாவில் கள்ள நோட்டுக்களை மாற்றி வந்த பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். …

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் கடந்த சில நாட்களாக பல யு.எஃப்.ஓக்கள் பறந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை …