ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் ஊகங்கள் கிளம்பியுள்ளன. சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு புகைப்படத்தில், அவரது கை வீக்கத்துடன் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.. கடந்த வாரம் எடுத்ததாக கூறப்படும் வீடியோவில், 73 வயதான புடினின் வலது கை சுருக்கங்களுடனும் வீங்கிய நரம்புகளுடனும் தென்பட்டது. அவர் அசௌகரியமாக தோன்றியதுடன், 22 வயதான யேகதெரினா லெஷ்சின்ஸ்கயா (Russian Healthy Fatherland இயக்கத் தலைவர்) சந்திக்கும் போது தன் […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மதியம் ஒரு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் காயமடைந்தனர்.. குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. உள்ளூர் ஊடகங்கள் வாகனத்திற்குள் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன, ஆனால் அது குறித்து போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. குண்டுவெடிப்பு நடந்த நீதிமன்ற வளாகம் […]
பாகிஸ்தான் நாடு வரலாறு காணாத மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளால் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றிப் பேசிய […]
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு […]
புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தற்போது “பாக்டீரியா” சிகிச்சை என்ற புதிய துறையில் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. தற்போதைய சிகிச்சைகளின் வரம்புகள் பல புற்றுநோய்களைச் சிகிச்சையளிப்பது கடினம். சில சமயங்களில் சிகிச்சை மருந்துகள் புற்று திசுக்களுக்குள் புக முடியாது. சில வேளைகளில் புற்றுநோய் தானாகவே நோயெதிர்ப்பு அமைப்பின் சில பகுதிகளைத் தடுக்கிறது, இதனால் மருந்தின் விளைவு குறைகிறது. மேலும், புற்றுநோய்கள் மருந்துகளுக்கு […]
மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி, பாதுகாப்பான புகலிடம் தேடி வரும் ரோஹிங்கியா அகதிகள், கடலில் எதிர்கொள்ளும் துயரங்கள் நிற்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையேயான கடல் எல்லைக்கு அருகில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மாயமாகி இருக்கலாம் என்று மலேசிய கடலோரக் காவல் அமைப்பு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது சுங்கக் கொள்கையை (Tariff Policy) உறுதியாக பாதுகாத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான சுங்க வரிகள் (tariffs) அமெரிக்காவை “உலகின் மிகவும் செல்வமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நாடாக” மாற்றியதாக அவர் கூறியுள்ளார். விமர்சகர்களை “முட்டாள்கள்” என்று குறிப்பிடும் டிரம்ப், பணக்காரர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் குறைந்தது 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹1.77 லட்சம்) சுங்க வருவாய் மூலம் […]
அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதுபோன்ற சோதனை நடத்துவதற்கான திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை என்று ரஷ்யா பதிலளித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அணு ஆயுத சோதனைகள் […]
இந்தியா இப்போது “அமைதியான சுகாதார நெருக்கடியை” நோக்கிச் செல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது: இந்தியாவில் சுமார் 138 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சீனாவிற்குப் பிறகு உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, இந்தியாவில் சிறுநீரக நோய் வேகமாகப் பரவி வருவதாக அறிக்கை கூறுகிறது. ஏனெனில் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் […]

