வடக்கு மெக்சிகோவில் நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவொர்ம் ஈ”(“New World screwworm fly”) எனப்படும் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் தெற்கு எல்லையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக விலங்குகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான தொற்றை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுண்ணி அதன் லார்வாக்களுக்கு(புழு) பெயர் பெற்றது, […]

பசுபிக் பெருங்கடலில் 20,000 அடி ஆழத்தில் மர்மமான கருப்பு முட்டை வடிவிலான பொருட்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் விஞ்ஞான உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவற்றை திறந்தபோது உள்ளே கண்டது தான் மிகவும் ஆச்சரியமும், வியப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அது, இவ்வளவு ஆழத்தில் முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய பல புதிய தரவுகளை அளித்துள்ளது. இது பூமியின் மிக ஆழமான பகுதிகளிலும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வளர்கின்றன என்பதற்கான உறுதியான ஆதாரமாகத் திகழ்கிறது. முட்டைகள் […]

உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]

பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் […]

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்டார். தெற்கு ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணம் மர்ஜா மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட அந்த நபருக்கு சிறுமியை பெற்றோரே விற்ற நிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது.. இந்த நிலையில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்படலாம் என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரானின் உச்ச தலைவரின் உயர் ஆலோசகரான ஜவாத் லாரிஜானி, ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் “ அமெரிக்க அதிபர் புளோரிடாவின் மார்-எ-லாகோ எஸ்டேட்டில் சூரிய குளியல் செய்யும் போது அவர் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும். ஈ “மார்-எ-லாகோவில் இனி சூரிய குளியல் எடுக்க முடியாதபடி […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும்போது டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்படலாம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையில் தலையிட்ட அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி அளித்த […]

ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச்சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். […]