பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு […]
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணை தொடர்பான, 30 லட்சம் பக்கங்கள் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வெளியீடுகளின் ஒரு பகுதியாகும். இதில் நீதிமன்றத் தாக்கல் ஆவணங்கள், உள் மின்னஞ்சல்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான விசாரணை தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை அடங்கும்.இதுவரை, சுமார் 3.5 மில்லியன் பக்க ஆவணங்கள் […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அரங்கேறியுள்ள பயங்கர வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகரின் பரபரப்பான ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள தெர்லாய் இமாம்பர்காவில் (வழிபாட்டுத் தலம்) நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தெர்லாய் இமாம்பர்கா வளாகத்தில் […]
வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஒரு பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்த குண்டுவெடிப்பு, இஸ்லாமாபாத்தின் ஷாசாத் டவுன் பகுதியில் உள்ள தர்லாய் இமாம்பர்காவில் நிகழ்ந்தது. இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சிறிது நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதலில் […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பாலியல் குற்றவாளி தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.. கோடீஸ்வரரான இவருக்கு அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.. ஆனால் எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.. 2000-களின் தொடக்கத்தில் இருந்தே எப்ஸ்டீன் மீது புகார்கள் வந்தாலும், நீண்ட காலம் சட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் துன்புறத்தல் […]
நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் பித்தோராகருடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நேபாளத்தின் பைதடி மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கர விபத்து நடந்தது.. இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காயமடைந்தனர். பல பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்புகளால் தவித்துக் கொண்டிருந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது ஒரு மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு கிடைத்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவி வந்த கசப்புணர்வை நீக்கும் வகையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிகளை அமெரிக்கா கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்ப், தனது ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tax) கொள்கையின் மூலம் உலக நாடுகளை […]
பெண்களுக்கு ஆண்களை ஈர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாக கூறப்படும், “செக்ஸுவல் இன்டெலிஜென்ஸின் காட்மதர்” (Godmother of Sexual Intelligence) என்ற பெயரில் அறியப்படும் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஷோ யுவான் மீது சீன அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள சந்தை ஒழுங்குமுறை துறை, பொது பாதுகாப்பு மற்றும் கலாச்சார அதிகாரிகளுடன் இணைந்து, ஷோ யுவான் வணிக செயல்பாடுகளை ஆய்வு செய்யும் சிறப்பு […]
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.. இவர்களில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களை சமூக ஊடகங்களில் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளைப் பகிர்ந்தனர்.. உலகின் மிகவும் செல்வாக்குமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றுக்கு இது ஒரு பேரழிவு தருணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மூத்த சர்வதேச […]

