நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை எடுத்து அவர் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
இந்த பெயரிடப்படாத திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், மேலும் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது.
ஆனாலும் இதுவரை இல்லை இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கயிருப்பது யார்? என்பது தொடர்பான எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. முதலில் இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு திரிஷா நடிப்பார் என்று கூறினார்கள். ஆனாலும் இதுவரையில் கதாநாயகி தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யாராய் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பது சற்றேற குறைய உறுதியாகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அஜித்துடன் இணைந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.