கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார். தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காரின் கதவை திறக்க சொல்லி மிரட்டியுள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் இருந்ததைப்பார்த்ததும் இருவரும் கார் கதவை திறக்கவில்லை. ஆத்திரமடைந்த மூவரும், அரிவாளால் காரின் முன்புற கண்ணாடியை வெட்டி உடைத்தனர். தொடர்ந்து, முன்புற கதவின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து அந்த மாணவியை வெளியே இழுத்தனர். அதை தடுத்த மாணவியின் நண்பரை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கினார்.

உடனே 3 பேரும் மாணவியை வெளியே இழுத்து, அருகேயுள்ள புதர் மறைவுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர். நேற்று அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவியின் நண்பர், கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மாநகர வடக்கு துணை ஆணையர் தேவநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தலையில் காயத்துடன் இருந்த மாணவியின் காதலனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் காயங்களுடன் புதரில் மயங்கிக்கிடந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.