நோட்..! ஜனவரிக்கு பதில் டிசம்பர் மாதம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு இழப்பீடு…! அமைச்சர் அறிவிப்பு

DMK farmers 2025

முன்கூட்டியே இழப்பீட்டுத் தொகை”“பயிர் சேதம் தொடர்பான கணக்கெடுப்பின் படி இழப்பீடு வழங்கப்படும். ஜனவரிக்கு பதில் டிசம்பர் மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க உத்தரவு. 33% மேல் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கன மழையால் அறுவடைக்கு தயாராகி வரும் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 18,520 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இதுவரை, 13,140 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; மீதமுள்ள, 5,380 பரிசோதனைகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. பயிர் அறுவடை சோதனைகளை முழுதுமாக முடித்து, தகுதி வாய்ந்த கிராமங்களுக்கு, வழக்கமாக 2026 ஜனவரியில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதை நடப்பாண்டு டிசம்பர் மாதம் வழங்க வேண்டும் என, பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதுவரை, 16.6 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. குறைவான விவசாயிகளே பயிர் காப்பீடு செய்துள்ளனர். விரைவாக காப்பீடு செய்வதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று வரை மர்மம் விலகாத கோயில்..!! லிங்க கருவறையில் தலைகீழாக தெரியும் நிழல்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Wed Oct 29 , 2025
இந்திய மண்ணில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோவில்கள், இன்றும் நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத மர்மங்களை உள்ளடக்கியுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான கோவில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாயா சோமேஸ்வரர் கோவில் ஆகும். சுமார் 10-ஆம் நூற்றாண்டில் கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், நிழல்களை அடிப்படையாகக் கொண்ட அதன் கட்டிடக் கலைக்காகப் புகழ்பெற்றது. இந்தக் கோவில் […]
Temple 2025 1

You May Like