தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தொகுதி, தொகுதியாக, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டன.
கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக, சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறியிருட்ந்தார். ஆனால் இதனை அதிமுக மறுத்து வருகிறது. தேர்தல் நெருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று மதுரையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாஜக முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் அந்தந்த ஊர்களின் முக்கிய கூட்டணி கட்சியினரை தன்னுடன் நிற்க வைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவத்டு வழக்கம்.
ஆனால் நேற்று ராம சீனீவாசன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சியினர், இபிஎச் பேசி முடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Read more: தூள்..! ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…!