உயிருக்கே ஆபத்து…! இடி, மின்னலின் போது தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது…!

mobile thunder 2025

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின்சாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


பருவமழை காலங்களில் பொதுமக்கள் பின்வரும் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற, தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு 3 மின்சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இடி அல்லது மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

உடைந்த சுவிட்சுகளையும் பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. கேபிள் டிவி வயர்களை மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்லக்கூடாது. மின்கம்பத்துக்காக போடப்பட்ட வயர் மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக் கயிறு கட்டி துணிகளை கண்டிப்பாக காயவைக்கக் கூடாது. மின்கம்பத்திலோ, தாங்கும் கம்பியிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார்..! 5 கி.மீ வேகத்தில் டிட்வா புயல்.. கரையை கடக்கும் நேரம் வெளியான...!

Sun Nov 30 , 2025
‘டிட்வா’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சற்று நேரத்தில் தமிழக – புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 25 – 50 கிமீ தொலைவில் புயல் மையம் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும். மேலும், காலை 7 மணி வரை சென்னை, நாகை […]
Cyclone 2025 1

You May Like