சடலமாகக் கிடந்த மருமகள்… நிம்மதியாகத் தூங்கிய மாமியார்… 10 வயது மகன் சொன்ன தகவலால் பரபரப்பு!

crime

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அனில் ராய். இவருக்கு 25 வயதான ப்ரீத்தி குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அனில் ராய், தற்போது ராஜஸ்தானில் வசித்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மாமியார்- மருமகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி இரவு, தனது சகோதரர் ராகவ் குமாருடன் ப்ரீத்தி குமாரி வீடியோ கால் பேசியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் வீட்டில் வேலை இருப்பதாக கூறிவிட்டு செல்போனை வைத்துள்ளார்.


இந்நிலையில், ப்ரீத்தி குமாரி செல்போனில் பேசி முடித்த ஒரு சில மணி நேரத்தில், ப்ரீத்தி இறந்து விட்டதாக கூறி ப்ரீத்தியின் கணவர் அணில் ராய் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ப்ரீத்தி குடும்பத்தினர் உடனடியாக அனில் ராய் வீட்டிற்க்கு சென்றுள்ளனர். அங்கு சடலமாக கிடந்த தங்களின் மகளை பார்த்து கதறி துடித்துள்ளனர்.

ஆனால் ப்ரீத்தியின் மாமியார் மற்றும் மற்றும் ஒரு உறவினர் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு தூங்கியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ப்ரீத்தியின் உறவினர்கள் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ப்ரீத்தியின் 10வது மகன் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன், தனது பாட்டி அதவாது ப்ரீத்தியின் மாமியார் தனது மருமகளுக்கு வலு கட்டாயமாக விஷம் கொடுத்ததாக கூறியுள்ளான். இதனையடுத்து மருமகளை கொலை செய்த மாமியாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பிரசவ வலியால் துடித்த பள்ளி மாணவி; விசாரணையில் சிக்கிய 7 கொடூரர்கள்..

Saranya

Next Post

"நான் வெளியே போகக் கூடாதுன்னு, என் அம்மா என்ன கட்டிவச்சாங்க" மனம் திறந்து பேசிய கலா மாஸ்டர்!

Thu Jul 9 , 2026
தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கலா மாஸ்டர். ஐந்து வயதிலேயே நடனப் பயணத்தைத் தொடங்கிய அவர், 12 வயதில் உதவி நடன இயக்குநராக தனது பணியை ஆரம்பித்தார். 26 வயதில் உலக அழகி (மிஸ் வேர்ல்ட்) போட்டிக்காக 320 நடனக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நடன அமைப்பை வடிவமைத்தார். தற்போது, தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடன இயக்குநர்களில் ஒருவராகவும், தமிழ் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் […]
cr 20220630en62bd6294bac75

You May Like