குட் நியூஸ்…! தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள்…!

tn govt 20251 1

தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 26 ‘தோழி’ தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகின்றன.

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.63 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் இதுவரை 34,987 பள்ளிகள் சேர்க்கப்பட்டு 20 லட்சம் குழந்தைகளும், அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 6,910 குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனர்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை கலை – அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவப் படிப்பு பயிலும் 5,29,728 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 3,92,449 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 75 ஆயிரம் குழந்தைகள் கண்டறியப்பட்டு, குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.22 கோடி யில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

வடகிழக்கு பருவமழை... அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு...!

Mon Oct 20 , 2025
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வடகிழக்கு […]
tamilnadu cm mk stalin

You May Like