போலீசில் மாட்டாமல் திருடுவது எப்படி…? யூடியூபில் வீடியோ பார்த்து திருடிய இருவர்….! போலீசில் சிக்கியது எப்படி….?

Youtube வலைதளம் என்பது அதில் பலருக்கும், பலவிதத்தில் உபயோகமாக இருக்கிறது. ஆனால் அந்த youtube வலைதளத்தில் எதுவும் தெரியாத நபர்கள் கூட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் அந்த அளவிற்கு youtube சாதனம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருந்து வருகிறது.

பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது. அதேபோல பல சமூக விரோத செயல்களுக்கும் இந்த youtube வலைதளம் பயன்படுகிறது என்பதை கேட்டால் சற்று பரிதாபமாக தான் இருக்கிறது.ஆனால் நல்லதும், கெட்டதும் பயன்படுத்துபவர்கள் கையில் தான் இருக்கிறது என்ற அடிப்படையில் அதனை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கே விட்டு விடலாம்.

அந்த வகையில், வளசரவாக்கம் அடுத்துள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராதா, இவர் சென்ற மாதம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த 2️ மர்ம நபர்கள் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து பல்வேறு விதங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு சற்றே வித்தியாசமான முறையில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை நடத்தினர்.

அதாவது, இந்த சம்பவம் நடந்தது இரவு சமயத்தில் என்ற காரணத்தால், கொள்ளையடித்துச் சென்றவர்களின் உருவம் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் சரியாக பதிவாகி இருக்காது என்பதனால், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக சுமார் 600 கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் தரப்பில் ஆய்வு செய்தனர்.

காவல்துறையினருக்கு அந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் அதற்கு முன்பாக பல பகுதிகளில் சுற்றி திரிந்தது இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் மாங்காடு தனிப்படை காவல்துறையினர் மதுரவாயில் நெற்குன்றத்தை சார்ந்த விஜய் (29), அவருடைய நண்பரான நொளம்பூரைச் சேர்ந்த படகோட்டி தமிழன்( 35) உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆனாலும் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பது காவல்துறையினருக்கு சற்று சவாலாகவே இருந்தது என்று கூறப்படுகிறது. 2 பேரும் காவல் துறையிடம் சிக்காமல் செயின் பறிப்பில் எப்படி ஈடுபடலாம் என்று பலவிதத்தில் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.

அதாவது, காவல்துறையினர் எந்தெந்த தடயங்களை வைத்து செயின் பருப்பில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்கிறார்கள் என்று youtube வலைதளத்தில் பார்த்து மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற பல தெருக்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சுற்றி திரிந்திருக்கின்றனர்.ஆகவே ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போதும் வெவ்வேறு உடைகளை மாற்றிய பின்னர் கெருகம்பாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து தெருக்களின் வழியாக சென்று ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் பின்னர் மறுபடியும் உடைகளை மாற்றிக் கொண்டு மதனந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் இருசக்கர வாகனத்திலும், மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக சென்றிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறையினருக்கு சவால் விடும் விதத்தில் உடைகள் மற்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளையும் மாற்றிக் கொண்டு சென்றதால் காவல்துறையிடம் நாம் சிக்கிக் கொள்ள மாட்டோம் என்று யூட்யூப் பார்த்து அதனை அடிப்படையாகக் கொண்டு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இருவரையும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ரிவர்ஸ் முறையில் பார்க்கும் திட்டத்தை கையாண்டு காவல்துறையினர் இருவரையும் அலேக்காக கைது செய்து இருக்கிறார்கள்.

அத்துடன் இந்த இருவரும் youtube வலைதளத்தை பார்த்துவிட்டு முதல்முறையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் அதோடு முதல் முறையே காவல்துறையிடம் சிக்கிக்கொண்ட சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது. இவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே கை செலவுக்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இவர்கள் இருவரும் கைதாகி இருக்கிறார்கள் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு.. அண்ணாமலை அறிவிப்பு..

Tue Feb 7 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் […]

You May Like