திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கிய ஒப்பந்தத்தை முறைகேடு எனக் கூறி ரத்து செய்த தவெக அரசு, தற்போது இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்க முடிவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய முதலமைச்சர் நிர்வாக திறனற்ற ஒரு ‘டம்மி முதல்வர்’ என்பதற்கு தமிழகம் இவ்வளவு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்வதே சான்று என்று கூறியுள்ளார். “காற்று வீசவில்லை, மழை பெய்யவில்லை, பஞ்சாப்பில் கூட இப்படி நடந்தது என கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இத்தனை நாட்களாக செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கியது இந்த ஊழல் டீலை முடிக்கத்தானா? இந்த ஊழல் ஒப்பந்தத்தை இறுதி செய்யத்தான் ‘பஞ்ச் டயலாக் சி.எம்’ பக்கத்து மாநிலத்திற்கு பறந்துள்ளாரா?” என உதயநிதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே மின்கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களை வதைக்கும் அரசு, இந்த கூடுதல் கொள்முதல் சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்தப் பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், மாற்றம் என சொல்லிவிட்டு நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் முதல்வருக்கு மக்கள் நிச்சயம் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று உதயநிதி கூறியுள்ளார்.
Read More : அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணம் இல்லாததால் மின்சாரத்தில் ஊழலா? விளாசிய ஸ்டாலின்!



