கொத்தாக அதிமுகவில் இணைந்த திமுகவினர்.. இபிஎஸ் Rock.. ஸ்டாலின் Shock..!!

6873285 newproject21 1

பட்டுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் களையெடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளளார். தொடந்து கூட்டணி கட்சிகளுடனும் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். செந்தில்பாலாஜி கரூர் கோவையில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார்.

இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில் இன்று பட்டுக்கோட்டையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

Read more: இந்திய உளவுத்துறையில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,42,400 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

English Summary

DMK members join AIADMK in droves.. EPS Rock.. Stalin Shock..!!

Next Post

ஒரு முறை டெபாசிட் செய்தால், வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.20,000 பெறலாம்.. போஸ்ட் ஆபிஸின் அற்புதமான திட்டம்!

Thu Jul 24 , 2025
If you deposit once in this amazing scheme of the Post Office, you can get Rs. 20,000 per month for life.
671332c659f51 post office schemes 282848327 16x9 1

You May Like