“திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம்”!. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

Vijay Udhaya 2026

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கடந்த 12-ஆம் தேதி காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பாா்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நோ்மையான ஆட்சி அமைய உறுப்பினா்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூா்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாா்.

எந்தவொரு பொருளாதார பலமும் இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினா்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவா்கள் தங்களின் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள சொந்தமாக வாகனமோ அல்லது உதவியாளா்களோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்தாா். 

இவரது கோரிக்கையை ஏற்று நேற்று முன் தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதற்கு சட்டமன்ற உறுப்பினர்களிடம் வரவேற்பை பெற்றாலும், எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்தநிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மட்டும் வாகனங்கள் வழங்க வேண்டும்; தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரத் தரவுகளுக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “முதலமைச்சரின் நோக்கம் இதே சட்டமன்றத்தில் ஏழ்மையாக இருக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி சட்டமன்றத்திற்கு பேருந்தில் தான் வந்து செல்கிறார். அவர் வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் அவையைப் பொறுத்தவரை அனைவரும் சமம் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் என அறிவித்துள்ளார். இங்கு பெரும்பாலனவர்களிடம் கார் இருக்கிறது. யார் ஏழ்மையாக இருக்கிறார்களோ, யாரிடம் கார் இல்லையோ அவர்கள் தான் கேட்கப் போகிறார்கள். இது ஒரு அடிப்படை புரிதல். தவெகவில் கார் இருப்பவர்களும் இதில் கேட்கப் போவதில்லை.  

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் 2,3 வீடுகள் உள்ளது. அப்படியிருக்கும்போது அவர் அரசு பங்களாவில் தான் இருக்கிறார். எனக்கு அரசுத்துறையின் பங்களா வேண்டும் என என்னிடம் தான் கடிதம் கேட்டார். இது அடிப்படை உரிமை. புரோட்டாகால் அடிப்படையில் அமைச்சர்களுக்கு வீடு, கார், உதவியாளர் கொடுக்கப்படுகிறது. ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு உதவியாளர், கார் எதுவும் இல்லை. தேர்தல் பத்திரத்தில் கார் இல்லை, வீடு இல்லை, ரூ.10 ஆயிரம் பணம் இருக்குன்னு கூட சொல்லலாம். 

முதலமைச்சர் பொதுவாக ஒரு அறிவிப்பை கொடுக்கிறார். கார் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பது அந்தந்த கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை பார்க்க கார் தேவை என்பது தான் நோக்கம் என சொன்னார். 

இதற்கு பதில் சொன்ன முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உள்ளவர். அதனால் அரசு வீடு தருகிறது. எனவே உதயநிதி அந்த வீட்டில் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள நினைக்கிறார். கார் வேண்டாம் என சொல்கிறோம். தேர்தல் பத்திரத்தில் நாங்கள் சொன்னது தப்புதான் என நினைத்தால் கேச் போடுங்களேன். என்ன இருக்கிறதோ அதைத்தான் சொல்ல முடியும். சொந்த வீட்டில் இருந்தால் கூட அமைச்சருக்கு அரசாங்கம் வாடகை கொடுக்கிறது. அதை வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே  என தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. 

1newsnationuser5

Next Post

உலக யானைகள் தினம்!. ரூ.62 லட்சம் மதிப்பிலான அரச நகைகள் அணிந்து கம்பீரமாக நடைபோட்ட யானைகள்!

Fri Aug 21 , 2026
ஜெய்ப்பூரில் உள்ள யானைகள் கிராமத்தில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ‘பாபு’ என்ற யானை 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய அரச கால வெள்ளி நகைகளை அணிந்து ஊர்வலத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பில் வலம் வந்த இந்த யானை, விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய ராஜஸ்தானி உடைகளை அணிந்திருந்த பாகோன்களுடன், பாபுவுடன் சேர்ந்து சண்டா, […]
WorldElephantDay

You May Like