மருத்துவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுக்க தடை! மீறினால் சிறை தண்டனை! தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி!

Doctors 2026

மருத்துவ உலகம் மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பெருகிவரும் போலி விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளின் கருத்துக்களை போலியாக உருவாக்குவதற்கும், வணிக ரீதியான வீடியோ விளம்பரங்களை தயாரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக தடை விதித்துள்ளது. மேலும், நோயாளிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் சிகிச்சை முறைகளை விளக்கும் நோக்கில் ஏஐ வாயிலாக உருவாக்கப்படும் அனைத்து விதமான விளம்பரங்களும் திட்டவட்டமாக தடை செய்யப்பட்டுள்ளன.


இதேபோல், இணையதளங்களில் கூகுள் தேடுதலின் போது பணம் கொடுத்து தங்களது மருத்துவமனையை முதல் இடத்தில் முன்னிலைப்படுத்துவது மற்றும் மருத்துவ தரவரிசைகளை பண பலத்தால் மாற்றி அமைப்பது போன்ற முறைகேடான விளம்பர உத்திகளுக்கும் கடிவாளம் போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக நோயாளிகளை கவரும் நோக்கில், சமூக வலைதள இன்ப்ளுயன்சர்கள் அல்லது விளம்பர ஏஜென்சிகளை பயன்படுத்தி ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதற்கும் ஆணையம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், வர்த்தக நோக்கம் இல்லாமல், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ விழிப்புணர்வு மற்றும் சுகாதார கல்வி தொடர்பான பதிவுகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த மருத்துவர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது எடுக்கப்படும் தண்டனை விபரங்களையும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. முதல் இரண்டு முறை விதிகளை மீறுவோருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். ஆனால், மூன்றாவது முறையாக இதே தவறை செய்தால், சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்லது மருத்துவமனையின் உரிமம் 3 முதல் 6 மாதங்கள் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதையும் மீறி தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து சம்பந்தப்பட்ட மருத்துவரின் பெயர் 3 ஆண்டுகள் வரை நீக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : 45 மெட்ரோ நிலையங்கள் மூடல்! இன்டர்நெட் சேவை கட்! டெல்லியில் இறங்கிய ராணுவ படை! என்ன நடக்கிறது?

Next Post

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆந்திரா விரைகிறார் முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை!

Sat Oct 10 , 2026
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழக எல்லைக்கு ஆந்திர அரசு திறந்துவிட வேண்டும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்திற்கு வெறும் 2.251 டிஎம்சி அடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதனிடையே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே புதிய அணைகளை கட்ட அம்மாநில அரசு முனைப்பு காட்டி வருவது தமிழக […]
Vijay Chandra Babu Naidu 2026

You May Like