திரை ரசிகர்களுக்கு ஷாக்..‌! இன்று முதல் 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரிப்பு…! அனுமதி கொடுத்தது அரசு…!

புதுவையில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் இயங்கி வரும் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.

2020 அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்போது, மக்கள் நலன் கருதி புதுவையில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75 ஆகவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரி திரையரங்க உரிமையாளர்கள் சமீபத்தில் அரசிடம் மனு அளித்தனர். இதை ஏற்று, கட்டணத்தை உயர்த்தி கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, 3ம் வகுப்பு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும்… 2ம் வகுப்பு 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், 1ம் வகுப்பு 100 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பால்கனி டிக்கெட் 150 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் 10 ரூபாய் அதிகபட்சம் 30 ரூபாயாக உயர்த்தப்படும். இந்த கட்டண உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே உஷாரா இருங்க...! இன்று 11 மாவட்டத்தில் கொட்ட போகும் கனமழை...!

Fri Nov 10 , 2023
நேற்று முன்தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், […]

You May Like