இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. 10ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

irctc shares in focus as indian railways to hike passenger fares from july 1 1

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள 11,127 உதவி ரயில் ஓட்டுநர் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


பணி விவரம்: உதவி ரயில் ஓட்டுநர் (ALP) என்பது ரயிலை இயக்கும் முதன்மை ஓட்டுநருக்கு துணையாக செயல்படும் தொழில்நுட்பப் பணியாகும். தண்டவாள சிக்னல்களை கண்காணித்தல், இன்ஜின் கோளாறுகளை கவனித்தல், சிறிய பழுதுகளை சரிசெய்தல் மற்றும் பயண பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பொறுப்புகள் இதில் அடங்கும்.

மொத்த காலிப்பணியிடங்கள்:

மொத்தம்: 11,127 பணியிடங்கள்

தெற்கு ரயில்வே (சென்னை மண்டலம்): 186 பணியிடங்கள்

கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்:

* 10ம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி + ITI அல்லது

* Mechanical / Electrical / Electronics / Automobile Engineering துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ
அல்லது மேற்கண்ட இன்ஜினியரிங் துறைகளில் பட்டப்படிப்பு

ITI துறைகள்:

Fitter
Electrician
Electronics Mechanic
Wireman
Diesel Mechanic
Motor Vehicle Mechanic
Turner
Machinist
Tractor Mechanic உள்ளிட்ட தொழில்பிரிவுகள்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 01-07-2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: ஆரம்ப அடிப்படை சம்பளம் ரூ.19,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப் படி மற்றும் ரன்னிங் அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும். இதனால் ஆரம்ப கட்டத்தில் மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் RRB Official Website அல்லது RRB Chennai இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 14, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: புது ட்விஸ்ட்..! அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை.. தவெக முடிவால் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஏமாற்றம்..!

English Summary

Employment in Indian Railways… Great opportunity for 10th class and ITI graduates!

Next Post

சமீபத்திய ரயில் தீ விபத்துகள் நாசவேலையாக இருக்கலாம்.. இந்திய ரயில்வே சந்தேகம்..

Wed May 20 , 2026
Indian Railways stated today that the series of train fire incidents recently reported across the country appear to be acts of sabotage.
train accident

You May Like