உங்க ஃப்ரிட்ஜ் மேல இதையெல்லாம் வெச்சிருக்கீங்களா? உடனே தூக்கிப் போடுங்க..!! வெடிக்கும் அபாயம்..!!

Fridge fire

உணவுப் பொருட்கள் கெட்டுபோகாமல் தடுப்பது முதல் குளிர்ந்த நீர் வழங்குவது வரை ஃப்ரிட்ஜின் தேவை அதிகமாகிறது. ஆனால், நாம் செய்யும் சில சிறிய தவறுகள், ஃப்ரிட்ஜின் செயல்பாட்டை பாதித்து, அதனை முழுமையாக பழுதாக்கி விடும் அபாயமும் உள்ளது. குறிப்பாக, குளிர்சாதன பெட்டியின் அருகே அல்லது அதன் மேல் நாம் வைக்கும் சில பொருட்கள், அதன் கம்ப்ரஸர் அமைப்பை கடுமையாக பாதிப்பதாக மின்சாதன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


பொதுவாக இட நெருக்கடி காரணமாக சமையலறையில் ஃப்ரிட்ஜின் அருகிலேயே மைக்ரோவேவ் ஓவன் (Microwave Oven), டோஸ்டர் மற்றும் கேஸ் அடுப்புகளை வைக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இத்தகைய சாதனங்கள் இயங்கும்போது வெளியிடும் அதிகப்படியான வெப்பம், ஃப்ரிட்ஜின் வெளிப்பகுதியை சூடாக்கி, அதன் கம்ப்ரஸர் தொடர்ந்து இயங்குமாறு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் குளிர்சாதன பெட்டியின் ஆயுட்காலம் குறைவதுடன், மின்சார பயன்பாடும் கணிசமாக அதிகரிக்கிறது. இதேபோல, பாத்திரம் கழுவும் இயந்திரத்தையும் ஃப்ரிட்ஜ் அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்; அது வெளியிடும் வெப்பமும் ஈரப்பதமும் ஃப்ரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பிற்கு பெரும் சவாலாக மாறுகிறது.

மேலும், ஃப்ரிட்ஜின் மேல் கனமான பாத்திரங்களையோ அல்லது உபகரணங்களையோ அடுக்குவது அதன் கட்டமைப்பை சேதப்படுத்துவதோடு சமநிலையையும் சீர்குலைக்கும். அதேபோல், ஜன்னல் வழியாக நேரிடையாக சூரிய ஒளி படும் இடங்களில் ஃப்ரிட்ஜை அமைப்பதையும் தவிர்க்க வேண்டும். நேரடி வெயில் மற்றும் அருகிலுள்ள வெப்ப உமிழ்வு சாதனங்களால் ஃப்ரிட்ஜின் வெப்பநிலை உயரும் போது, அது உள்ளே இருக்கும் உணவை குளிரூட்ட வழக்கத்தை விட இருமடங்கு மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கும்.

எனவே, ஃப்ரிட்ஜ் நீண்ட காலம் எந்த பழுதும் இன்றி இயங்க, அதனை சுவரொட்டி வைக்காமல் சுவருக்கு பின்புறம் குறைந்தது 6 அங்குல இடைவெளி விட்டு நிறுவ வேண்டும். இது கம்ப்ரஸரில் இருந்து வெளியேறும் வெப்பம் எளிதில் பரவ உதவும். மேலும், ஃப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கான்டென்சர் காயில்களில் தூசி படிவதை தவிர்க்க குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை சுத்தம் செய்வதும், கதவுகளின் ரப்பர் பீடிங் சரியாக மூடுகிறதா என்பதை சரிபார்ப்பதும் மின்சார செலவை குறைத்து ஃப்ரிட்ஜின் ஆயுளை நீட்டிக்க உதவும்.

Read More : கட்சி நிதி பேரில் லஞ்சம்..!! முதலீடு வராததற்கு காரணமே இதுதான்..!! விளாசிய அமைச்சர் அருண்ராஜ்..!!

Next Post

காபி குடிப்பவர்களே கவனம்… இந்த நேரத்தில் குடித்தால் ஆபத்து அதிகம்!

Sat Aug 1 , 2026
காபி என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காமல் பலரால் நாளையே தொடங்க முடியாது. ஆனால் காபி குடிப்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். தவறான நேரத்தில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிப்பதுடன், மனஅழுத்தம், பதற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும். காலை எழுந்த உடனே காபி […]
Coffee

You May Like