ஆம்புலன்ஸில் இபிஎஸ் செல்வார் என பேசவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.. 3 மாதங்களாக அவர் பஸ்ஸில் தான் சுற்றி வருகிறார்.. 15 நாட்களுக்கு முன்பு அவர் ரோட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவசர தேவைக்காக ஆம்புலன்ஸில் வந்தனர்..
அப்போது அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி, ஓட்டுநரை மிரட்டினார்.. இந்த வீடியோ வைரலான நிலையில், ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படி பேசலாமா? ஒரு மனிதாபமானம் உள்ள மனிதர் இப்படி பேசலாமா என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதனால் தான் நேற்று தினம் நான் பேசிய போது, எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, நீங்கள் ஆம்புலன்ஸை நிறுத்துகிறீர்கள்.. எந்த தலைவர் பேசினால், திமுக தலைவர் முக்கியமாக ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு தான் பேசவே ஆரம்பிப்பார்.. ஒரு தலைவர் என்றால் அப்படி இருக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மாதிரி ஒரு தலைவர் இருக்கலாமா?
அதனால் தான் அதிமுக தான் இன்று ஆம்புலன்ஸில் செல்லும் நிலையில் தான் உள்ளது.. பாஜகவின் அறுவை சிகிச்சையால் ஐசியூவில் அதிமுக என்ற கட்சி அனுமதிக்கப்படும்.. கடைசியில் உங்கள் கட்சியை காப்பாற்றும் மருத்துவராகவும் எங்கள் தலைவர் தான் என்று தான் சொன்னேன்.. எடப்பாடி பழனிசாமி இதை கேட்டாரா, கேட்கவில்லையா? அல்லது கேட்காத மாதிரி நடிக்கிறாரா என்பது தெரியவில்லை..
நேற்று அவர் மிகுந்த வன்மத்தோடு பேசி இருக்கிறார்.. உதயநிதி என்னை ஆம்புலன்ஸில் ஏற்றிவிடுவாரா? எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று பேசியிருக்கிறார்.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகாலம் நல்ல உடல்நலத்தோடு மன நலத்தோடு நீங்கள் வாழ வேண்டும் என்பதை உள்ளன்போடு முழு மனதோடு சொல்கிறேன்.. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக நீங்கள் இருக்க வேண்டும்.. அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது.. திமுகவின் வெற்றி எளிதாகும்..
அதிமுகவில் இந்த 3 மாதத்தில் ஏற்கனவே புதிய அணிகள் உருவாகி உள்ளது.. ஓபிஎஸ் அணியா, டிடிவி தினகரன் அணியா, சசிகலா அணியா, தீபா அணியா அல்லது செங்கோட்டையன் அணியா என அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. ஆனால் இப்போது பாஜக என்ற ஒரே அணியின் கீழ் உள்ளது என்று அதிமுகவினர் புரிந்து கொண்டனர்..
மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற பெயரில் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் நீங்கள் பாஜகவிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..