ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை.. படப்பை இரட்டை படுகொலை.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்..!

vijay eps

படப்பை இரட்டை படுகொலை சம்பவத்திற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

சென்னை புறநகர் பகுதியான படப்பையில் இரண்டு கானா பாடகர்கள் ஓடும் பைக்கில் வந்த கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : இனி எங்கும் அலைய வேண்டாம்..! வாட்ஸ் அப்-லேயே பிறப்பு சான்றிதழ் பெறலாம்.. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!

English Summary

Former Chief Minister and AIADMK General Secretary Edappadi Palaniswami has strongly condemned the double murder incident in Padappai.

RUPA

Next Post

12 பேர் பலி..! திருமணத்திற்கு சென்ற போது கோர விபத்து.. மகாராஷ்டிராவில் சோகம்..!

Mon May 18 , 2026
12 people lost their lives in a horrific accident that occurred today in the Dahanu taluk of Maharashtra state.
mumbai road accident 1

You May Like