பட்டப்பகலில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப்படுகொலை! முன் பகை காரணமா?

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை, சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் கருக்கா(45). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன. மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் இருக்கிறது. ரவுடியான சுரேஷின் மனைவி விமலா தூய்மை பணியாளராக இருந்து வருகிறார்.

தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கணவர் சுரேஷ் சென்றுள்ளார். விமலா தூய்மை பணியை செய்து கொண்டிருந்தபோது 2 சக்கர வாகனத்தில் சிலர் அச்சுறுத்தும் வகையில் அங்கே வந்துள்ளனர். இதைக்கண்ட கருக்காசுரேஷ் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்பொழுதும் விடாமல் அந்த கும்பல் சுரேஷை துரத்தியுள்ளது.

நடுரோட்டில் சுரேஷை ஓட, ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். சுரேஷை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தங்களுடைய இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,கருக்கா சுரேஷின் உடலை கைப்பற்றி,

உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த கொலை காரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த விசாரணையின் அடிப்படையில் சுரேஷுக்கு, அந்த கும்பலுக்குமிடையே கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

Next Post

இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடனா..? சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பக்தர்கள் செய்யும் காரியம்..!!

Thu Dec 15 , 2022
ஓதியத்தூர் கோயிலில் நேர்த்திக்கடனாக சாப்பிட்ட எச்சில் இலை மீது பக்தர்கள் உருளும் விநோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒதியத்தூரில் பிரசித்தி பெற்ற விருபாக்ஷீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மஹந்யாச விழா நடைபெற்றது. இதில், பூர்வ ஏகாதேச ருத்ரா அபிஷேக தீபாதரனை ஆகியவற்றை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆத்தூர் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து […]
இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடனா..? சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பக்தர்கள் செய்யும் காரியம்..!!

You May Like