பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..!! உடல் சிதறி 3 தொழிலாளர்கள் மரணம்..!! சிவகாசி அருகே சோகம்..!!

sivakasi fire 1641015343

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது பலத்த சத்தத்துடன் மருந்துகள் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொருவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலையின் கட்டடங்களில் தீ வேகமாகப் பரவி எரிய தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆலைக்குள் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என்பதை அறிய மீட்புக் குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : வசமாக சிக்கினார் மாஜி அமைச்சர் எ.வ.வேலு..! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!

Next Post

சளி, இருமல் தொல்லையா? வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் வெங்காயம்-தேன் சிரப்!

Thu Aug 13 , 2026
மழைக்காலம் அல்லது குளிர்ச்சியான நாட்களில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் பலரையும் அவதிப்படுத்தும். இதற்காக உடனடியாக மருந்துகளை நாடுவதற்கு முன்பு, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை வைத்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பானங்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் வெங்காயம் மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் சிரப்பும் ஒன்று. இந்த சிரப்பை தயாரிப்பது மிகவும் எளிது. தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து சிறிது நேரம் […]
colder 1

You May Like