மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற கணவர்! தடுக்க வந்த மாமனாருக்கும் அரிவாள் வெட்டு!

64ed50741452a45e279ea3ba50e445ffcca95e75e474d9608c1278b2c5da14b3

வெளிநாட்டிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பிய பெண், தனது தாயுடன் சேர்த்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவர், மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்ற மாமனாரும் படுகாயமடைந்துள்ளார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், பீர்மேடு அருகே உள்ள கிளன்மேரி எஸ்டேட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் பிரின்ஸ் (36), எஸ்டேட்டில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (30), வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று காலை பிரியங்காவின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், பிரியங்காவும் அவரது தாயார் நேசமும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரும் உயிரிழந்த நிலையில், பிரியங்காவின் தந்தை இஸ்ரவேல் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இஸ்ரவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இரு பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரின்ஸுக்கும் பிரியங்காவுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று மது போதையில் மனைவியின் வீட்டுக்குச் சென்ற பிரின்ஸ், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், அரிவாளால் மனைவியையும் மாமியாரையும் வெட்டிக் கொலை செய்ததுடன், மாமனாரையும் தாக்கியுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான பிரின்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். இரட்டைக் கொலை மற்றும் மாமனார் மீதான தாக்குதல் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: கைகள் இல்லை.. கால்களால் வில்வித்தை.. ஒரே நாளில் 2 தங்கம்! இந்திய வீராங்கனையின் அபார சாதனை..

Saranya

Next Post

அக்டோபர் முதல் டிசம்பர் வரை மின் கட்டணத்தில் மாற்றம்? அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம்? வெளியான அதிர்ச்சித் தகவல்!

Fri Oct 23 , 2026
பெங்களூருவில் மின்சாரக் கட்டணம் செலுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதத்தில் மின் தேவை திடீரென அதிகரித்ததால், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை கர்நாடக மின்துறைக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவை நுகர்வோரிடமிருந்து படிப்படியாக வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரம் வாங்குவதற்கான செலவில் ஏற்படும் மாற்றங்களைச் சரிசெய்யும் வகையில், எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் செலவு […]
Electricity Bill

You May Like