தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது..
இதனிடையே 2 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு என்று தகவல் வெளியானது.. விஜய் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு கிடைத்ததால் அவர் நாளை காளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.. அதே போல் தவெக ஆட்சியமைக்க விசிகவும் இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை..
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு முடிவை அறிவிப்பதாக விசிக அறிவித்துள்ளது..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் ஐபிஎஸ் மனு அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிடக் கோரி ராமசுப்பிரமணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் ” பெரும்பான்மை இல்லை, எனக்கூறி பொறுப்பு ஆளுநர் இதுவரை விஜய்யை அழைக்காமல் இருக்கிறார்..



