Flash : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

manickam tagore

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என அனைத்திலும் முக்கிய பங்கு வகித்தவர். பதவியில் தொடர விரும்பவில்லை என காங்கிரஸ் தலைமையிடம் செல்வப்பெருந்தகை வலிய்றுத்திய நிலையில் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் பங்கு என்றும், காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறி வந்தார்.. மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக உடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளது.. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே திமுக தோல்வியையும், அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மாணிக்கம் தாக்கூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : திமுகவை விட்டு விலகிவிட்டோம்.. இனி தவெகவுக்கு தான் எங்கள் ஆதரவு.. வைகோ பரபரப்பு பேட்டி..!

RUPA

Next Post

இன்னும் 3 நாட்களில் ராஜ யோகம்..! இந்த ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்..!

Sat Jun 27 , 2026
முக்கிய கிரகங்களும் ராசிகளும் தங்கள் இடங்களை மாற்றிக்கொள்ளும்போது, ​​அவை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மீது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். மூன்று கிரகங்களின் பெயர்ச்சி இரண்டு ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜோதிடத்தின்படி, அடுத்த மாதம் குரு மற்றும் சந்திரன் இணைவதால் ‘கஜகேசரி யோகம்’ உருவாகிறது. இந்த அரிய யோகங்களின் காரணமாக, குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்களும் இதுவரை கண்டிராத வகையிலான வெளிநாட்டு வாய்ப்புகளையும் […]
astro zodiac

You May Like