Flash: ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர் தரப்பில் விளக்கம்..

vijay governer 1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தவெகவுக்கு ஆதரவு 113 ஆக கூடியுள்ளது.


இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டப்படி பதவியேற்பு விழா நடைபெறவில்லை.

இதற்கிடையே ஆட்சி அமைப்பது தொடர்பான சில விளக்கங்களை கேட்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் மக்கள் பவனுக்கு சென்ற விஜயிடம் ஆளுநர் பல கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மை கிடைத்துவிடும் என எந்த யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியும். வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீங்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2வது முறையாக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நிலையில் மக்கள் பவன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவிடம் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இல்லை. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: பெற்றோர்களே கவனம்.. ஸ்மார்ட்போன் குழந்தைகள் மூளையை எப்படி மாற்றுகிறது தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..!

English Summary

Flash: The majority required to form the government must be proven..! – Explanation from the Governor..

Next Post

பரபரப்பு.. இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..! தமிழக அரசியலில் என்ன நடக்கிறது..?

Thu May 7 , 2026
EPS is meeting the Governor this evening.. What is happening in Tamil Nadu politics..?
EPS

You May Like