வேதனை…! தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் மறைவு…! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

MK Stalin dmk 6

வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.


தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளை சரளமாகப் படிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற காசிநாதன் தமிழகம் முழுவதும் வரலாற்றுக் கருத்தரங்குகளையும், கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி பல இளைஞர்களும் இத்துறையில் ஆர்வம் பெற உழைத்துள்ளார்.

இதுதவிர, கல்லெழுத்துக் கலை, சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், ராசராசேச்சுரம் உட்பட பல்வேறு நூல்களை எழுதியதுடன், பல நூல்களை பதிப்பித்து, தொல்லியல் துறைக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவரது அளப்பரிய பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக, தமிழக அரசின் உ.வே.சா. விருது, சிறந்த நூல் விருது உட்பட பல விருதுகளை பெற்றார்.

பணி ஓய்வுக்கு பின்னும், தீவிரமாக தன் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த அறிஞரான காசிநாதன் மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தார், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கார் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா!. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி!. வைரல் வீடியோ!

Tue Oct 7 , 2025
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது நீண்டகால காதலியான ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சாலை விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார். தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வாலா மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி அருகே அவரது கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் நோக்கி விஜய் தனது லெக்ஸஸில் சென்று கொண்டிருந்தபோது, ​​வலதுபுறம் திரும்பிய ஒரு பொலிரோ கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
vijay deverakonda car accident

You May Like