கட்சி பதவியில் இருந்து முன்னாள் MLA நீக்கம்‌…! இபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

palaniswami edappadi k pti 1200x768 1

முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியத்தை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது.


மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என ஸ்டாலின் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என பாஜக கூறி வருகிறது.

மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநாட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு பதவிகளை கொடுத்து பழைய நிர்வாகிகளை நீக்கம் செய்து வருகிறார். அந்த வரிசையில் முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியத்தை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி விடுவித்துள்ளார். அவருக்கு பதிலாக கிரேசி என்பவரை தஞ்சை மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியில் இபிஎஸ் நியமித்துள்ளார்.

Read more: குட் நியூஸ்..! பொது வருங்கால வைப்பு நிதி.. வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை…!

Vignesh

Next Post

பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை பட்டினியால் இறந்த சோகம்!. மனதை ரணமாக்கும் கொடூரம்!. இஸ்ரேல் பிடியில் சிக்கித் தவிக்கும் காசாவின் அவலம்!.

Sun Jul 20 , 2025
மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி, மனதை ரணமாக்கும் விதமாக பிறந்த ஒருவாரமே ஆன குழந்தை பட்டினியால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள், ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை அடுத்த நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை. காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை காட்சிகளை பார்க்கும்போது மனதை ரணமாக்குகிறது. […]
baby starves death Gaza 11zon

You May Like