கல்லூரி மாணவர்களுக்கு நவீன வசதி கொண்ட இலவச லேப்டாப்…! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Tn Govt 2025

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக கல்லூரி மாணவ, மாணவிகள் 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.


தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரபல கணினி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது.

இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய ஹெச்பி, டெல், ஏசெர் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வழங்கப்பட்டது. 15 இன்ச் எல்இடி திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்டு டிஸ்க், 720 பி ஹெச்டி கேமரா, ப்ளூடூத் 5.0 என நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்த மடிக்கணினி ரூ.21,650-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க உள்ளார்.

Vignesh

Next Post

உள்ளூர் காவல்துறை உதவியுடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை கல்லூரிகளில் ஆய்வு நடத்துவது கட்டாயம்...!

Mon Dec 8 , 2025
உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை […]
College students 2025

You May Like