சீனாவில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜூவான் (Ajowan) என்ற இளம்பெண், தனது காதலனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையின் பிறகு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
தகவலின்படி, அஜூவான் தனது காதலனுடன் பல ஆண்டுகளாக உறவில் இருந்தார். ஆனால், காதலனின் தவறான பழக்கங்கள், அடிக்கடி சொல்லும் பொய்கள், பொறுப்பற்ற நடத்தைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண், பலமுறை அவருடன் பிரேக்-அப் செய்ய முடிவு செய்தார்.
இருப்பினும், காதலன் இதை ஏற்காமல் தொடர்ந்து அஜூவானை தொல்லை செய்தார். மட்டுமல்லாமல், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு, அஜூவானை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. பிரேக் செய்வதாக காதலி கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை விட்டு செல்வதற்கு பதிலாக தன்னை “அடித்தே கொன்றுவிடு” என காதலன் கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த காதலி, காதலனை உடல் ரீதியாக தாக்கி, பலத்த காயங்களுக்கு ஆளாக்கினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காதலன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அஜூவானை கைது செய்தனர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், குற்றவாளி தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சீன நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
Read more: ரூ.500 முதலீடு செய்தால் ரூ.35,000க்கு மேல் கிடைக்கும்.. குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!!