தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.42,720க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,340-க்கு விற்பனையாகிறது..இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரனை அதிரடியாக கைது செய்த காவல்துறை….! காரணம் என்ன….!

Sat Feb 11 , 2023
பொதுவாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். நிச்சயமாக நாம் என்றாவது ஒரு நாள் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தான் அது.ஆனால் அப்படி தொழில் அதிபராவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் திடீரென்று தொழிலதிபராக மாறி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் தான் அது போன்ற […]

You May Like