விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்..!! உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் வரப்போகுது..!! இதெல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க..!!

pm kisan

மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் ‘பி.எம். கிசான்’ (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபாய் நிதியுதவியின் அடுத்த தவணையை எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இத்திட்டத்தில், 23-வது தவணை நிதி கடந்த ஜூன் 20 அன்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, 24-வது தவணை நிதி வரும் அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.


விவசாயிகள் தங்களின் கணக்கிற்கு அடுத்த தவணை பணம் வருமா என்பதைப் பி.எம். கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள ‘Beneficiary Status’ பகுதிக்கு சென்று, பதிவு செய்யப்பட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் தங்களின் கணக்கு நிலவரத்தையும், நிதி வரவு வைக்கப்பட்ட விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

இடைத்தரகர்களின் தலையீடின்றி தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே நிதி நேரடியாக சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், ‘இ-கே.ஒய்.சி’ (eKYC) நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனைப் பி.எம். கிசான் இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாகவும், அருகில் உள்ள பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் நிறைவு செய்யலாம். மேலும், கைபேசியில் பி.எம். கிசான் மற்றும் ‘ஆதார் ஃபேஸ் ஆர்.டி’ செயலிகளை பதிவிறக்கம் செய்து, முகவரி அங்கீகார (Face Authentication) தொழில் நுட்பத்தின் மூலமும் விவசாயிகள் எளிதாக தங்களின் ‘இ-கே.ஒய்.சி’ நிலையை உறுதி செய்து கொள்ள முடியும்.

அதேவேளையில், விதிமுறைகளுக்கு மாறாகப் பயன் பெற முயலும் சில கணக்குகளை அடையாளம் கண்டு, தற்காலிகமாக நிதியை நிறுத்திவைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு நிலத்தின் உரிமையாளர்களானவர்கள் மற்றும் ஒரே குடும்பத்தில் கணவன்-மனைவி இருவருமே இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வருவது போன்ற நேர்வுகளில், உரிய பரிசீலனைகள் முடியும் வரை நிதி விடுவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : JUST IN | “இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க”..!! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்..!!

Next Post

7 பேர் பலி…! உத்தரகாண்ட் சுரங்க விபத்து…! தேடும் பனி தீவிரம்..!

Fri Aug 14 , 2026
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த நீர்மின் திட்ட சுரங்கத்தில் திடீரென தண்ணீர் மற்றும் மண் குவியல்கள் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபால்கோட்டி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (THDC) நிறுவனத்தின் நீர்மின் திட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் […]
chamoli tunel accident 2

You May Like