அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்த அரசு உத்தரவு.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலே, அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 01.04.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்துள்ளனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read more: அசத்தல்.. செயற்கை ரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்..! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும்..