அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று என்னவெல்லாம் பேசினார்.. எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர்.. துரோகத்தை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், அவர் பாஜகவை கழட்டிவிட தயாராக இருப்பார்… விஜய் கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பது தெரியவிலை..
விஜய் தலைமையில் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது தவெக நிலைப்பாடு. பழனிசாமியை முதல்வராக்க விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரா?. பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் தூக்கி பிடிப்பாரா? அவரின் கட்சியினர் அதனை ஏற்றுக்கொள்வார்களா? நடக்காத ஒன்றை பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார்.. பழனிசாமி முதல்வர் வேட்பாளராக உள்ளதாக அதிமுக பாஜக கூட்டணி பலவீனமாகிக் கொண்டிருக்கிறது.. இன்னும் அது பலவீனமாக தான் ஆகும்.. தேர்தலில் எடப்பாடி கூட்டணி 15% தான் வாக்குகள் பெறும்..” என்று தெரிவித்தார்..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக உடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத்தில் தவெக கொடி உடன் சிலர் இருந்ததால் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அனில் அம்பானியின் உதவியாளர் கைது.. ரூ.17,000 கோடி மோசடி வழக்கில் ED அதிரடி!