சுவையான ஆந்திரா ஸ்டைலில் கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 250 கிராம்
வெங்காயம் – 3
புளி – சிறு எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 1 கப்
கடுகு – தேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பு – தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம் :
முதலில், கத்தரிக்காய்களைக் கழுவி, தண்டுகளை அகற்றி, அவற்றை நான்காக வெட்டவும். புளியை தண்ணீரில் கரைத்து, தேங்காய் துருவல் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, புளி கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து கிளறவும். வெங்காயத்தை வதக்கிய பிறகு, கலவையை எடுத்து, வெட்டப்பட்ட கத்திரிக்காய்களில் அடைக்கவும். ஒரு கடாயில் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றவும். பின்னர் கத்தரிக்காய்களை அடுக்கவும். அதன் மேல் மீதமுள்ள மசாலா கலவையை ஊற்றி மூடி மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து, எல்லா பக்கமும் வெந்ததும் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா ரெடி!