தேங்காய் எண்ணெய் தலை முடிகளுக்கு மட்டுமின்றி, உணவிலும் சேர்த்து வந்தால் நல்ல்ல பலன் பெறலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே உபயோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி உபயோகிக்க கூடாது. நாளொன்றுக்கு சுமார் 30 மில்லி அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 30 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று ஸ்பூன் அளவு மட்டுமே கொண்டிருக்கும். சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை விட்டு தாளித்து சமைத்து வரலாம். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக சாலட்களிலும் இதனை பயன்படுத்தி வரலாம்.
காய்கறிகளை இட்லி பாத்திரத்தினுள் வைத்து ஆவிகட்டி பிறகு சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளித்து சாப்பிடலாம். ஆனால் இதில் அதிக காரத்தினை போட்டு சாப்பிடக் கூடாது. இரவில் தூங்குவதற்கு முன்பு கால், முகம் மற்றும் கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய்யை பூசி தூங்கி வர முகம் பளபளக்கும். அத்துடன் அதிக தண்ணீரையும் குடித்து வருதல் மிகவும் நல்லது.