fbpx

சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

தேங்காய் எண்ணெய் முடிகளுக்கு மட்டும் அல்ல உணவிலும் சேர்த்து வந்தால் பலன் பெறலாம். இதில் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே உபயோகிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி உபயோகிக்க கூடாது.

நாள் ஒன்றுக்கு சுமார் 30 மில்லி அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 30 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று ஸ்பூன் அளவு மட்டுமே கொண்டிருக்கும். சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெயை விட்டு தாளித்து சமைத்து வரலாம். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக சாலட்களிலும் இதனை பயன்படுத்தி வரலாம்.

காய்கறிகளை இட்லி பாத்திரத்தினுள் வைத்து ஆவிகட்டி பிறகு சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளித்து சாப்பிடலாம். ஆனால் இதில் அதிக காரத்தினை போட்டு சாப்பிடக் கூடாது. இரவில் தூங்குவதற்கு முன்பு கால், முகம் மற்றும் கைகளில் சிறிது தேங்காய் எண்ணெய்யை பூசி தூங்கி வர முகம் பளபளக்கும். அத்துடன் அதிக தண்ணீரையும் குடித்து வருதல் மிகவும் நல்லது.

Baskar

Next Post

நோய் இன்றி நீண்ட நாள் நலமாக வாழவேண்டுமா.. அதற்கான வழிமுறைகள்..!

Mon Nov 28 , 2022
நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு நோய்களுக்கு நாம் அடிமையாகி கொண்டு இருக்கிறோம். இதனில் இருந்து விடுபெற சிறந்த வழிகளை இங்கே காணலாம்.  நாள்தோறும் 4 பாதாம் பருப்புகளை உண்டு வருவதால் உடலில் இருக்கும் தேவையற்ற பல கொலஸ்ட்ரால் கரைய செய்கிறது. அத்துடன் அரை டீஸ்பூன் அளவு கசகசா சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. கசகசா சேர்ப்பதனால உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை சேர்த்துக் […]

You May Like