fbpx

இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.?!

இரவு உணவிற்கு பின்பாக பழங்கள் சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. அது உடலுக்கு ஏற்றதல்ல என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வாழைப்பழம் இரவு உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரவு உணவிற்கு பின்பாக எந்த ஒரு உடற்பயிற்சியும் நாம் செய்ய மாட்டோம் அப்படியிருக்க வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சத்து நம் உடலில் தங்கிவிடும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு உணவிற்கு பின்பு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் வாழைப்பழத்தை இரவில் எடுத்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அடிக்கடி வாழைப்பழம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்பதால் இரவு நேரங்களில் வாழைப்பழம் கொடுப்பதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

"மு.க.ஸ்டாலின் தலைமையில் அசுர வளர்ச்சி.." "ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகரும் தமிழ்நாடு.." முகேஷ் அம்பானி புகழாரம்.!

Sun Jan 7 , 2024
உலக அளவில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2030 ஆம் வருடத்திற்குள் தமிழகம் ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு திட்டமாக சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்களின் வர்த்தக மாநாடு இன்று […]

You May Like