டிராகன் பழம் எனறாலே எல்லோருக்கும் தனிப்பட்ட ஆவல் இருக்கிறது. அந்த பழத்தின் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம்.
டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற நோய்கள் வருவதற்கு உற்பத்தியாகும் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களை அழிக்காமல் பாதுகாக்கிறது.
இயற்கையாகவே இதில் கொழுப்பு இல்லாதது மற்றும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. குடலில் உள்ள புரோபயாடிக்ஸ் எனப்படும் சுகாதாரமான சில பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் இது வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் இருக்கிறது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
உடலில் இரும்புச் சத்தையும் அதிகரிக்க உதவுகிறது. டிராகன் பழத்தை மதியம் மற்றும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வரலாம். இரவினில் உண்ணும் போது, சிறந்த தூக்கத்தைத் தூண்ட உதவுகிறது.
டிராகன் பழத்தினை வயிறு உப்பிசம் மற்றும் வயிற்றுப்போக்குடன் நெருங்கிய தொடர்புடையது. எனவே அதிகமாக சாப்பிடுபவர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.