முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இதன் வரிசையில் அடுத்து வருவது வாழைப்பழம் தான். இது சருமத்தில் ஈரப் பதத்தை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் உலர்ந்த சருமத்தை புதுப்பித்து, முகத்தில் நீர்ச்சத்தை சமநிலை செய்ய பெருமளவு உதவுகிறது.
குளிர்காலத்தில் தினந்தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் சருமத்தில் இளமை தோற்றத்தை தக்க வைக்கிறது. மேலும் மாதுளை பழமும் குளிர்காலத்தில் சரும ஜொலிப்புக்கும் பெரிதும் துணை புரிகிறது. அத்துடன் தோலில் ஏற்படும் சுருக்கங்களை போக்குகிறது.