இனியும் இவனை வளர்க்க முடியாது..! மகனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய தாய்..! பரபரப்பு உத்தரவு..!

court judgement

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பூர்வமாக தத்தெடுத்து வளர்த்து வந்த 14 வயது மகனை, தன்னால் தொடர்ந்து வளர்க்க இயலவில்லை எனக் கூறி, அந்த தத்தெடுப்பை ரத்து செய்துவிட்டு அவனை மீண்டும் அரசு அல்லது தனியார் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதிக்குமாறு நொய்டாவை சேர்ந்த தாய் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த அந்தப் பெண் தனது கணவருடன் இணைந்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதாக இருந்த ஆண் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு அவரது கணவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தின் மொத்தப் பொறுப்பும் அந்தப் பெண்ணின் தலையில் விழுந்த நிலையில், தத்தெடுத்த மகனை அவர் தனியாகவே பராமரித்து வந்துள்ளார்.

தற்போது 14 வயதை எட்டியுள்ள அந்த சிறுவனுக்கு, நடப்பாண்டின் தொடக்கத்தில் லேசான அறிவுசார் குறைபாடு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன், சிறுவனிடம் கட்டுப்பாடற்ற ஆக்ரோஷ நடத்தை, திருடும் பழக்கம் மற்றும் முறையற்ற செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. அவனது இந்த ஒழுங்கீன நடவடிக்கைகளின் காரணமாக பல பள்ளிகள் அவனைத் தொடர்ந்து படிக்க அனுமதிக்காமல் இடைநீக்கம் செய்து வெளியேற்றியுள்ளன.

ஒரு தனிப் பெண்ணாக, மகனின் இந்த அதீத வன்முறை மற்றும் நடத்தை சிக்கல்களைத் தன்னால் இனி கட்டுப்படுத்தவோ சமாளிக்கவோ முடியவில்லை என்றும், இதனால் தனது மன அமைதியும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அந்தப் பெண் தனது மனுவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியச் சட்ட விதிகளின்படி, முறைப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தையை நேரடியாகக் கைவிடவோ அல்லது காப்பகங்களில் திருப்பித் தரவோ முடியாது; நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள் வாயிலாக மட்டுமே அத்தத்தெடுப்பை ரத்து செய்ய முடியும். இதனால் தான், அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Read More : பெண்கள் மட்டும்தான் House Wifeஆ இருக்கணுமா? ஆண்கள் House Husbandஆ இருக்கக் கூடாதா? விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

Next Post

தூக்கத்தில் இருந்த பயணிகள்.. திடீரென பற்றி எரிந்த பேருந்து; 9 பேர் உயிரிழப்பு!

Fri Sep 25 , 2026
யமுனா விரைவுச்சாலையில் அதிகாலை நேரத்தில் சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தில் இருந்ததால், தீப்பற்றியதும் அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இருந்து மஹோபா நோக்கி 34-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. யமுனா விரைவுச்சாலையில் அதிகாலை நேரத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியது. […]
ee19968228099ac2c7c6ad09cf85fa2842826da3a048c9ef02b8bf1523d229a5

You May Like