“நீ வேண்டாம்.. உங்க சித்திதான் வேணும்!” மனைவியின் 45 வயது சித்தியை திருமணம் செய்ய பிடிவாதம் பிடித்த இளைஞர்…

fd4015b32a462cb54586eae918640fba17b343131a2f47fafbd70ebecc7cb946

இன்றைய தலைமுறையில் காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் சில முடிவுகள், குடும்ப உறவுகளையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாகியுள்ளது. திருமணமான 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தை நாடியுள்ளனர்.


மைன்புரியைச் சேர்ந்த தேஜ்வீருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, கணவரை இழந்து 5 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த அவரது மனைவியின் சித்தி லதாவின் வீட்டிற்கு தேஜ்வீர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது.

கடந்த 6 மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் உறவினர்களுக்குத் தெரியவந்ததும், இருவரையும் பிரித்து வைக்க குடும்பத்தினர் முயன்றுள்ளனர். ஆனால், தாங்கள் பிரிய முடியாது என்றும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழப் போவதாகவும் தேஜ்வீரும் லதாவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து லதாவை அழைத்துக் கொண்டு தேஜ்வீர் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அவருடைய 5 குழந்தைகளையும் தானே பொறுப்பேற்று வளர்க்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் போலீசாரிடம் தேஜ்வீர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த முடிவுக்கு லதாவின் குழந்தைகளும் உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது லதாவும் தேஜ்வீரும் கோபமடைந்ததாக அவரது மூத்த மகன் அன்ஷுல் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரையும் பிரிக்க முயன்றபோது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தீ வைக்க முயற்சி நடந்ததாகவும், ஒன்றாக வாழ அனுமதிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என லதா மிரட்டியதாகவும் அன்ஷுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தீ வைக்க முயற்சி நடந்ததா, குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது தொடர்பான புகார்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

காதல் முடிவு தனிப்பட்டதாக இருந்தாலும், அது குடும்பத்தினருக்கு இடையே மோதலாக மாறியுள்ளதால் இந்த விவகாரம் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. தேஜ்வீர் மற்றும் லதாவின் உறவு தொடர்பான குடும்பப் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.

Also Read: பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூடுபிடித்த வீரமணி வழக்கு.. ரூ.10 கோடி பணப்பரிவர்த்தனையின் பின்னணி என்ன?

Saranya

Next Post

“4 மாதத்துக்குள் ஆட்சி மாற்றம்”.. தவெக அரசை பற்றி எடப்பாடி சொன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு..

Tue Sep 22 , 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இன்னும் 4 மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக பேசியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இரு தொகுதிகளின் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அக்ரி […]
bf157276dd1185b5edcd6b7dce609702e8d1e08b6ac37299703531be7b8d6973

You May Like