பிரதமர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.18,000 வரை ஊக்கத்தொகை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

money e1749025602177

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.12.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள். 10-,ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com…etc) கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். ஆகவே அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.-ல் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித்தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஸ்ஸர் அப்ரண்டீஸாக சேர்ந்து தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெறலாம்.

டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com…etc) கல்வித்தகுதி உடையவர்கள் ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று NSDC/SSC வழங்கும் அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ் பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.9600/- முதல் ரூ.18000/-வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

எனவே ஐ.டி.ஐ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (BE/BA/BSc/B.com…etc) கல்வித்தகுதி உடையவர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வரும் 08-12-2025 அன்று தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் சேர்க்கை முகாமில் அசல் கல்விச்சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(இரண்டாம் தளம்), தருமபுரி எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 94422 86874, 94999-37454 மற்றும் 70108-65277 ஆகிய அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பள்ளி ஆசிரியருடன் ஓரினச்சேர்க்கை..!! திடீரென வெடித்த தகராறு..!! சாலையில் ஓட ஓட வெட்டிக்கொன்ற 17 வயது சிறுவன்..!!

Sun Nov 30 , 2025
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43) சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைப் பூர்வீகமாக கொண்ட சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து கழுகுமலையில் உள்ள பெற்றோரின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் இருந்து 500 […]
Crime 2025 11

You May Like