இந்தியாவில் 1000-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 833 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 953 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,65,643 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,22,562 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,528 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,79,09,506 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,16,228 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

திருமண ஆசைக்காட்டி ரூ.60 லட்சம் மோசடி செய்த டாக்டர்.!

Sat Nov 12 , 2022
சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, […]
ரூ.60,000 வரை சம்பளம்..!! பல்வேறு காலியிடங்கள்..!! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..!!

You May Like