அக்கினி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! மத்திய அரசு சூப்பர் ஒப்பந்தம்…!

அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் 14-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள் மற்றும் பலன்கள் பாதுகாப்புச் சம்பளத் தொகுப்பைப் போலவே உள்ளன. கூடுதலாக, வங்கிகள் வெளியேறும் அக்னிவீரர்களுக்கு அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்த மென் கடன்களை வழங்குகின்றன.

“அக்னிபத் திட்டத்தின்” கீழ் முதல் தொகுதி அக்னிவீரர்கள் ஜனவரி 2023க்குள் பயிற்சி மையங்களில் சேருவார்கள்

Vignesh

Next Post

மருத்துவமனை மாடியில் 200 மனித உடல்கள்..!! குவிந்து கிடந்த சடலங்களால் பதறிப்போன அதிகாரிகள்..!!

Sun Oct 16 , 2022
பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையின் மாடியில் அழுகிய நிலையில், சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள […]
மருத்துவமனை மாடியில் 200 மனித உடல்கள்..!! குவிந்து கிடந்த சடலங்களால் பதறிப்போன அதிகாரிகள்..!!

You May Like