இந்திய ராணுவத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு 63,000 சம்பளத்துடன் 1793 காலியிடங்கள்!

இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஆர்மி அட்னன்ஸ் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1793 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஏ ஓ சி என்னும் ஆர்மி ஆர்டெனன்ஸ் ஆப் கார்ஸ் துறையில் ட்ரேட் மேன் மேட் மற்றும் ஃபயர் மேன் பணிகளுக்கு 1793 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ட்ரேட்மேன் பணிகளுக்கு 1,249 காலியிடங்களும் ஃபயர் மேன் பணிகளுக்கு 544 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


இந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோருக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையாக ஐடிஐ தொழிற்கல்வி பிரிவில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பாக 25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ட்ரேட்மேன் பணிகளுக்கு ஊதியமாக 19,900 ரூபாயிலிருந்து 63,200 ரூபாயும் ஃபயர் மேன் பணிகளுக்கு 18,000 ரூபாயிலிருந்து 56,900 ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு வருகின்ற 18-ம் தேதிக்குள் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலை வாய்ப்பினை பற்றிய மேலதிக விபரங்களை அறிய www.aocrecruitment.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் .

1newsnationuser5

Next Post

TNPSC மெகா அறிவிப்பு...! குரூப்-2 மொத்தம் 5,413 காலியிடங்கள்...! ஹால்டிக்கெட் வெளியீடு...!

Fri Feb 17 , 2023
குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப் – 2 ஏ நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதத் தகுதியான தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவு எண் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தின் வாயிலாக ( https://rb.gy/k4xd6w […]
TNPSC

You May Like