நடுவானில் தீப்பற்றிய இண்டிகோ விமானம்.. பவர் பேங்கால் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சியில் பயணிகள்!

WhatsApp Image 2026 10 11 at 5.44.43 PM

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் பவர் பேங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானத்தின் மேல்புறப் பயணப் பைகள் வைக்கும் பகுதியில் புகை மற்றும் தீப்பற்றியதை அடுத்து, விமானம் ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.


அக்டோபர் 11-ம் தேதி, இண்டிகோ நிறுவனத்தின் 6E 6115 விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த விமானம், 1.30 மணிக்குப் புறப்பட்டது. சென்னை விமான நிலையத்தை மாலை 4 மணிக்கு வந்தடைய வேண்டிய நிலையில், விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் தீப்பற்றல் காரணமாகப் பயணம் திசைமாறியது.

விமானத்தின் மேல்புறப் பகுதியில் புகை வெளியேறியதைக் கவனித்த பயணிகள் பதற்றமடைந்தனர். அப்போது, சில பயணிகள் தங்களது பைகளைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்தக் காட்சிகளைப் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, விமானப் பணியாளர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணி ஒருவரின் தனிப்பட்ட மின்னணு சாதனத்திலிருந்து புகை வெளியேறியதையடுத்து, விமானம் ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகத் தெரிவித்தது. விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டது.

சென்னைக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்த இண்டிகோ நிறுவனம், பயணிகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்குவதுடன், தொடர்ந்து தகவல்களையும் அளித்து வருவதாகக் குறிப்பிட்டது.

Also Read: மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி.. 21 தங்கப் பதக்கங்களை அள்ளிய சென்னை பெண்கள் அணி!

Saranya

Next Post

60 சவரன் நகைக் கொள்ளை.. போலீசாரிடம் சிக்கியதும் கழுத்தை அறுத்துக்கொண்ட கொள்ளையன்!

Sun Oct 11 , 2026
போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றபோது, தனது கழுத்தையே அறுத்துக்கொண்ட கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுசீந்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மரியாந்தோனி ஆக்னலைப் பிடிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுசீந்திரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த சேவியர் சீலன், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமலா, குழந்தைகளுடன் […]
5ad9419415e2d7d91fa13828e5b8e2a5e21e222c08f52655e361921c4abd2d89

You May Like